பார்ட்டிக்கு வர மறுத்த நடிகை சுட்டுக்கொலை?
பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு மறுத்த நடிகையை, சுட்டுக் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள கைபர் படுங்க்வா மாநிலத்தில் உள்ள மர்தானை சேர்ந்தவர் சும்பல் கான் (25). இவர் மேடை நாடகங்களில் நடித்து வருபவர். இவருக்கு பாடும் திறமையும் உள்ளது.
இந்த நிலையில் சும்பலின் வீட்டுக்கு அடையாளம் தெரியாத 3 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது அவர்கள் சும்பலிடம், பார்ட்டி ஒன்றில் கலந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளனர்.
ஆனால், சும்பலோ அதற்கு வர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சும்பலை பலமுறை கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். இதில், சும்பல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தபோது, சும்பலின் தாத்தா மிர் பகதூர் இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மிர் பகதூர், போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரியான நயிம் கட்டாக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.