இளம் பெண் ஒருவருக்கு தேவைக்கு அதிகமாக பால் சுரந்த நிலையில், அதனை பதப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளார். இதுவரை 3 லட்சம் ரூபாய் வரை பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ரஃபேல் லாம்ப்ரூ (24). இவர் அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார்.   இவருக்கு சமீபத்தில் ஆன்ஜிலோ என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய பின்னரும், அவருக்கு தாய்ப்பால் சுரப்பது
நிற்கவில்லை. 

தேவைக்கு அதிகமாக பால் சுரப்பதால், பயந்து ரஃபேல் லாம்ப்ரூ, டாக்டரிடம் சென்று கூறியுள்ளார். அதற்கு டாக்டர், இது சாதாரண ஒரு விஷயம்தா. இதனை தடுப்பதற்கு பதிலாக தாய்ப்பால் இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு ஏன் இந்த தாய்ப்பால் விற்கக் கூடாது என்று டாக்டர் கேட்டுள்ளார். 

இதனை அடுத்து, தாய்ப்பாலை விற்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். இது குறித்து கணவரிடம் அனுமதி பெற்று விற்பனையில் ஈடுபட்டுள்ளார். கணவரிடம் கூறிய ரஃபேல் லாம்ப்ரு, தாய்ப்பால் பதப்படுத்தி பேஸ்புக் குழு ஒன்றின் மூலம் விற்க தொடங்கியுள்ளார்.

தாய்ப்பால் பற்றாக்குறை கொண்ட பெண்களுக்கு மட்டுமே, விற்கப்பட்டுவந்த நிலையில், தாய்ப்பால் கேட்ட அனைவருக்கும் விற்பனை செய்து வந்துள்ளாராம் ரஃபேல். தனது தாய்ப்பாலை பதப்படுத்தி விற்பனை செய்ததில், இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் வரை சம்பாதித்துள்ளாராம் ரஃபேல் லாம்ப்ரு.