தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை!
உலகிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில் தாய் பால் கொடுத்த முதல் திருநங்கை இவர் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை இவருக்கு வயது 35வயது நிரம்பி இருக்கிறது. 'மவுண்ட் சினாய் செண்டர் ஃபார் டிரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அண்ட் சர்ஜரி' என்ற மருத்துவமனையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
இது எப்படி நடந்தது என்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில்; முப்பத்தி ஐந்து வயதுடைய திருநங்கை ஒருவர் வாடகைத்தாய் மூலமே குழந்தை பெற்று இருக்கிறார். ஆனால் அந்தப் பெண் குழந்தைக்குப் பால் கொடுக்க வாடகைத்தாய் மறுத்துள்ளதால் கடைசி நேரத்தில் இந்தத் திருநங்கை பெண்ணைப் பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் அழைத்து இருக்கிறார்கள்.
கடந்த மூன்று மாதங்களில் அந்தத் திருநங்கை ஒரு நாளுக்கு 8 அவுன்ஸ் பால் உற்பத்தி செய்து இருக்கிறார். இதனால் அவர் பால் கொடுப்பதில் எந்த வித தவறும் இல்லை என்றுள்ளனர். அதேபோல் முறையான சோதனைக்கு பின் பால் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், இதற்காக இந்த திருநங்கை எந்த வித ஆபரேஷனும் செய்யவில்லை. கனடாவில் இருந்து ஹார்மோனை மாற்றக் கூடிய மருத்துவ முறைகள் மூலம் இந்தச் சாதனை செய்துள்ளனர். குழந்தை பிறப்பதற்கு 5 மாதத்திற்கு முன்பே திருநங்கைக்கு மருத்துவ முறை மூலம் அவருக்குப் பால் சுரக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இவர் இன்னும் 6 மாதம் வரை பால் கொடுக்க முடியும். அதன்பின் சரியான உணவு முறைகள் மூலம் பால் கொடுக்க வைக்கலாம். இல்லை என்றால் குழந்தைக்கு அதற்கு ஏற்றப் புரத பொருட்களை நேரடியாக உணவில் கொடுக்கலாம் என கூறியுள்ளார்கள்.