12 வயது சிறுவனுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்ட கன்னியாஸ்திரி….. 62 ஆண்டுகளுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ?

A nun sex with 12 year old boy in england after 62 years what happend ?
A nun sex with 12 year old boy in england after 62 years what happend ?


கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திய 12 வயது சிறுவன் தற்போது 76 வயதான நிலையில்  62 ஆண்டுகளுக்குப்  பின்னர் அவர் தனக்கும் கன்னியாஸ்திரிக்கும்  பிறந்த குழந்தையை அண்மையில் நேரில் சந்தித்தார்.

பிரிட்டனின்  லான்காஷிர் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையால்  நடத்தப்படும் ஜான் ரேனால்ட்ஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் எட்வர்ட் ஹயேஸ் என்பவர்  பிறந்தார். தாய், தந்தையை இழந்த எட்வர்ட்  கடந்த . 1950-ம் ஆண்டு தனது 12 வயதை எட்டிய போது அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் பணி புரிந்த  27 வயது மேரி கான்லெத் என்ற கன்னியாஸ்திரி எட்வர்டை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளார். 

அவர்கள் இருவருக்கும் இடையேயான தொடர் பாலிய்ல் உறவால் மேரி கான்லெத் என்ற கள்ளியாஸ்திரி  கர்பமடைந்தார்.  இந்த தவறு அப்போது பெரும் பரபரப்பான செய்தியாக இருந்தது. இதையடுத்து மேரி கான்லெத் அந்த ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் அவர் தனது  சொந்த நாடான அயர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து கர்ப்பமாக இருந்த மேரி கான்லெத்துக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு நான்ஸி என பெயரிட்டு வளர்த்து வந்தார்.

A nun sex with 12 year old boy in england after 62 years what happend ?

நான்ஸி பிறந்த  சில ஆண்டுகள் கழித்து  மேரி கான்லெத், எட்வர்டை தேடி இங்கிலாந்து வந்துள்ளார். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் மீண்டும் அவர் அயர்லாந்து திரும்பினார்

அதே நேரத்தில் மேரி கான்லெத்  வேறு திருமணம் செய்த கொண்டார். அதன் பின்னர் நான்கு குழந்தைகள் பெற்றெடுத்த அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

காலங்கள் உருண்டோடிய நிலையில், தற்போது எட்வர்ட் ஹயேஸ் 76 வயதை எட்டிவிட்டார். இந்நிலையில், அந்த கன்னியாஸ்திரி மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எட்வர்ட் 62 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசினார். 

மேரி கான்லெத்தின்  மற்ற குழந்தைகள் எட்வர்டை தேடிப்பிடித்து இந்த சந்திப்பை நடத்தியுள்ளனர்.  முதன் முதலாக எனது மகளை பார்க்கும் போது பதற்றமாக இருந்தது. பின்னர், அவள், நேரம் நம்மை இப்படி ஆக்கிவிட்டது அப்பா என்றாள். என்னைப் போன்றே அவளும் நகைச்சுவை உணர்வு மிக்கவள்” என எட்வர்ட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

பழைய சினிமாக்களில் வருவது போன்று நடந்த எட்வர்டு – நான்ஸி சந்திப்பு சம்பவம் இங்கிலாந்தில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios