உகாண்டா நாட்டில்  காயுங்க என்ற இடத்தில் இஸ்லாமிய  மதுபோதைக்கு திருமணம் நடந்து இரண்டு வாரம் கழித்தே அவரது மனைவி ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது .  தெற்கு உகாண்டாவின் காயுங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது  முதும்பே இவர் இஸ்லாமிய மதபோதகர் ஆவர் ,  இவர் ஒவ்வொரு முறையும் மசூதிக்கு செல்லும்போதும்  எதிரே  முகத்தில்  நிஜாப் அணிந்து வந்த  ஸ்வபுல்லா நபுகீரா என்பவரை சந்தித்துள்ளார் ,  இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியதில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் .  திருமணமான இரண்டு வாரங்கள் ஆன நிலையில்  மனைவி ஸ்வபுல்லா நபுகீரா   மீது பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தனர் அதில் , 

 

 மதபோதகரின் மனைவி ஸ்வபுல்லா நபுகீரா  தங்களது வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து  தங்களது வீட்டில் உள்ள துணிமணிகளை திருடினார் என புகார் கூறினர்,  இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் ஸ்வபுல்லா நபுகீராவை காவல் நிலையம் அழைத்துச் சென்று  விசாரித்தனர் . எப்போதும் குற்றவாளிகளின்  ஆடைகளை கழற்றி  நிர்வாணப்படுத்தி விசாரிப்பது அந்நாட்டு  வழக்கம் ,  எனவே நபுகீராவின்  ஆடைகளை போலீசார் கழற்றினர் அப்போது அவர் தனது ஜாக்கெட்டுக்குள் துணிகளை சுற்றி மார்பகம் போல வைத்திருந்தது தெரியவந்தது .  உடனே அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ,  அவரது கீழ்ப்பகுதி உள்ளாடையையும் கழற்றினார் ,  அப்போதே அவருக்கு ஆணுறுப்பு இருப்பதைக் கண்டு ஸ்வபுல்லா நபுகீரா  பெண்ணல்ல பெண் வேடமிட்ட ஆண் என்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே இந்த தகவலை  கணவரும் மத போதகருமான முகமது  முதும்பேவிடம்  உங்கள் மனைவி பெண்ணல்ல ஆண் என்பதை தெரிவித்தனர்.  முதும்பே பயங்கர அதிர்ச்சியடைந்தார்.  தொடர்ந்து  நபுகீராவை விசாரித்ததில் தம்முடைய பெயர் ரிச்சர்டு துமுஷாபே என்றும்,  பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் வேடமிட்டு மதபோதகரை காதலித்து  திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.  தனக்கு நேர்ந்த மோசடி  குறித்து  கருத்து தெரிவித்த மதபோதகர் அவரை ஒரு பெண் என்று நினைத்தே  திருமணம் செய்து கொண்டதாகவும் ,  திருமணமாகி இரண்டு வாரம் இருவரும்  உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் , அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக கூறியதால் அவரிடம் இருந்து தான் விலகியே இருந்தேன் என மதபோதகர் விளக்கமளித்துள்ளார்.  ஒரு ஆண் பணத்திற்காக பெண் வேடமிட்டு மத போதகரை திருமணம் செய்து மோசடி செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .