தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர் ஒருவரின் உதட்டை கடித்து  துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை சேர்ந்த சாஷாங்க் அகர்வால் என்ற நபர் தனது நபர்களுடன் சேர்ந்து தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று உள்ளார். பொதுவாகவே தாய்லாந்து சென்றாலே மசாஜ்க்கு பெயர் போன இடமாக கூறுவது   வழக்கம். 

மேலும் இந்தியாவில் இருந்து அட்டுமல்லாமல் தாய்லாந்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் அகர்வால், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு தாய்லாந்தில் உள்ள, பட்டாயா என்ற பகுதியில் வாக்கிங் சென்று  உள்ளார்.

அப்போது வழியில் வீடு திரும்பி கொண்டிருந்த, அந்நாட்டு பாலியல் தொழிலாளியான சுகன்யா பபேக் என்ற  பெண்ணிடம் பேசிக் கொண்டே நடந்து உள்ளார். அப்போது  திடீரென அந்த பெண் மீது கை வைத்து செக்ஸ் சில்மிஷம் செய்துள்ளதாக தெரிகிறது. 

தாய்லாந்து சென்று நடுரோட்டில் அந்த பெண்ணிடம் தவறாக  நடக்க முயன்ற சாஷாங்க் கீழ் உதட்டை கடித்து துப்பி உள்ளார். வலியால் துடி துடித்து போன, அந்த நபரை பார்த்த அருகில் இருந்தவர்கள் போலீசில் புகார் தெரிவிக்க ஓடி  வந்து பார்த்த போலீசார், நிலைமையை புரிந்துக்கொண்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து போலீசார் சுகன்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எனக்கு அவர் யார் என்று தெரியாது.. நான் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது, ஹெலோ ஹாய் என ஆரம்பித்தார். நானும் பேசினேன். அப்போது திடீரென என் மீது கை வைத்து என் கன்னத்தில் அறைந்தார். நானும் பாதுகாப்பு கருதி அவரை தாக்கினேன். அவ்வளவு தான். இதில் என் மீது எந்த தவறும் இல்லை என அவர் தெரிவித்து உள்ளார் .