குடிநீர் பாட்டில்களில் 90% பிளாஸ்டிக் துகள்கள்...! ஆய்வில் அதிர்ச்சி...!

90 plastic particles in drinking water bottles shock information
90% plastic particles in drinking water bottles shock information


பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களில் 90 சதவீதம் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளது.

9 நாடுகளில் உலகின் முன்னணி நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்தியா, அமெரிக்கா, சீனா, தாய்லாந்து, பிரேசில், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முன்னணி குடிநீர் பாட்டில்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த பிஸ்லரி பாட்டில் இடம் பெற்றது.

இந்த ஆய்வு குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஹெர்ரி மோசன் கூறும்போது, குறிப்பிட்ட பிராண்டுகளைக் குற்றம் சுமத்துவதற்காக இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை என்றார். 

எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து இருக்கிறது; பரலாக காணப்படுகிறது என்பதை உணர்த்தவே இந்த சோதனையை நாங்கள் மேற்கொண்டோம் என்று கூறினார்.

மேலும், இது தொடர்பாக அமெரிக்காவின் ஆர்ப் மீடியா அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், 9 நாடுகளில் 19 இடங்களில் இருந்து 11 நிறுவனங்களைச் சேர்ந்த 259 குடிநீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன. 

இதில் ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 325 பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. பரிசோதிக்கப்பட்ட 259 நாடுகளில் மட்டும் 17 மட்டுமே பிளாஸ்டிக் துகள்கள் இல்லாமல் உள்ளன. மற்றவற்றில் 90 சதவீதம் வரை பிளாஸ்டிக் துகள்கள் உள்ளன. இந்த பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios