ஒரு மணி நேர சுகத்திற்காக 9 வயது சிறுமிகளை, திருமணம் செய்யும் கொடூர நாடு..!! வரதட்சனை கொடுத்து வன்புணர்வு செய்யும் ஆண்கள்...!!!
மதகுரு போன்ற ஒருவரை அணுகி, தான் ஒரு 12 வயது ஆதரவற்ற சிறுமியுடன் ஒரு மணி நேரம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும், இன்பத் திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் அவர் சிறுமியாக இருந்தாலும் சரி என்பதில் உறுதியாக உள்ளீர்களா என மீண்டும் கேட்பதும்,
ஒரு மணிநேர சுகத்துக்காக 9 வயது முதல் 15 வயது உள்ள ஆதரவற்ற சிறுமிகளை ஈராக் நாட்டு ஆண்கள் இன்பத்திருமணம் என்ற பெயரில் வன்புணர்வு செய்யும் ஆதாரத்தை பிரிட்டிஸ் செய்தி ஊடகம் வெளியிட்டு உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈராக்கில் மனைவியை பிரிந்திருக்கும் ஆண்கள் இன்பத் திருமணம் என்ற பெயரில் ஒரு மணி நேர சுகத்துக்காக சிறுமிகளை வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து கொள்ளும் வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது. ஈராக் நாட்டின் கர்பலா பகுதிக்கு சென்ற பிரிட்டிஷ் செய்தியாளர் அங்கு நடக்கும் இன்ப திருமண முறையை ஸ்டிங் ஆபரேஷன் செய்துள்ளார். (கேமிராவை மறைத்து வைத்து படம் பிடிப்பது) அதாவது மனைவியை பிரிந்து அல்லது திருமணம் ஆகாமல் உள்ள ஆண்கள் சிறுமிகளை ஒருமணிநேர சுகத்திற்காகவோ அல்லது 99 ஆண்டு வரை குத்தகையாக எடுத்தோ உல்லாசம் அனுபவித்து கொள்ளும் முறைதான் இன்பத் திருமணமுறை. இது ஈராக் நாட்டில் பிரபல்யம் என்றாலும் தற்போது அதற்கு தடை உள்ளது.
ஆனாலும் மறைமுகமாக ஈராக் நாட்டு இஸ்லாமிய மதகுருக்கள் இதுபோன்ற திருமணங்களை ஊக்குவிப்பதை தனது கேமராவில் செய்தியாளர் பதிவு செய்துள்ளார் அதில், அச்செய்தியாளர் இஸ்லாமிய மதகுரு போன்ற ஒருவரை அணுகி, தான் ஒரு 12 வயது ஆதரவற்ற சிறுமியுடன் ஒரு மணி நேரம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும், இன்பத் திருமணம் செய்து வைக்க முடியுமா என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் அவர் சிறுமியாக இருந்தாலும் சரி என்பதில் உறுதியாக உள்ளீர்களா என மீண்டும் கேட்பதும், அதற்கு , 9 வயதுக்கு மேல் இருந்தால் ஷரியா சட்டப்படி அது ஒரு பிரச்சனையே அல்ல என்றும் அந்தகாட்சியில் பதில் கிடைக்கிறது.
மற்றொரு மதகுரு, தானே ஒரு சிறுமியின் புகைப்படத்தை அனுப்பி வைப்பதாகவும் அதன்பின் ஒரு மணி நேரம் முதல் 99 ஆண்டுவரை, காலத்திற்கேற்ப சிறுமிக்கு வரதட்சணை கொடுத்து அனுபவிக்கலாம் என்று கூறுவதைப் போன்று காட்சி பதிவாகி உள்ளது. அத்துடன் இது எந்த விதத்திலும் பலாத்காரம் ஆகாது, அந்த சிறுமிக்கு விருப்பம் இருப்பதாலும் அதற்கு நீங்கள் பணம் கொடுப்பதால் இதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் பேசுவது பதிவாகியுள்ளது. இதுகுறித்து பின்னர் விலாவாரியாக பேசும் அந்த செய்தியாளர். தங்களுக்கு நிரந்தரமாக திருமணம் ஆகாமல் போய்விடுமோ என்ற அச்சம் சிறுமிகளுக்கு உள்ளதாகவும். குடும்ப வறுமை காரணமாக பலரை திருமணம் செய்துகொள்ளும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறுகிறார். இது குறித்து சிறுமிகள் முன்வந்து புகார் அளிக்காத வரை மதகுருக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிப்பதாக இறுதியில் ஆவணப்படம் குறிப்பிடுகிறது.