அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் தன் ஆண் நண்பருடன் வெறித்தனமான செக்ஸில் ஈடுபட்ட பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. நியூஜெர்ஸியைச் சேர்ந்தவர் மைக்கேல் (21)  விக்டோரியா காப்ரியா (19) இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாரவிடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நள்ளிரவு வரை மது விருந்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறி நியூஜெர்சியில் உள்ள ஹேக்கன்சாக்கில் ஒரு உயரமான கட்டடத்துக்கு சென்றதாக தெரிகிறது.  இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை 2:15  மணிக்கு (911 அவசர உதவி எண்ணிற்கு) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று வந்தது.

அதில் நியூஜெர்சியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து  அங்கு விரைந்த போலீசார்,அந்த  இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் அத்த பெண், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதனை  அடுத்த என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்ததில்,  அந்தப்பெண் பெயர் விக்டோரியா என்பதும் அவர் வெள்ளிக்கிழமை இரவு வாரயிறுதி கொண்டாட்டத்திற்காக மைக்கேல் என்பவருடன் மது விருந்தில் ஈடுபட்டதாகவும். பின்னர் இருவரும் அங்குள்ள உயரமான கட்டிடத்தில் உள்ள ஒரு  கார் பார்க்கிங்கிற்கு  சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

காரில்,  விக்டோரியா உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது சுயநினைவு இழந்துவிட்டதாக அவரது ஆண் நண்பர் மைக்கேல்  போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து விசாரித்ததில் இருவரும் முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்றும்,  விருந்தில் சந்தித்தபோது ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் உடலுறவு வைத்துக் கொண்டதாக தெரியவந்தது.  பின்னர் பிரேத பரிசோதனையில் முதற்கட்ட தகவலில், விக்டோரியாவின் கழுத்தில் சில காயங்கள் இருப்பதுடன் கரடுமுரடான செக்ஸ் வைத்துக் கொண்டதால் அவர் மரணமடைந்து இருக்கக்கூடும் எனவும்,  அல்லது அளவுக்கு அதிகமான போதைப் பொருள் எடுத்துக் கொண்டதால் உயிர் இருந்திருக்கலாம் என்றும்,  சந்தேகிக்கப் படுகிறது. 

இருப்பினும்,  சந்தேகத்திற்குரிய மரணம் என இதை போலீசார் கருதுவதால்,  மைக்கேல் மீது பொறுப்பற்ற மனித கொலை செய்யப்பட்டதற்கான வழக்கு பதியப்பட்டுள்ளது.  இருப்பினும் விக்டோரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளிவரவில்லை, இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.