world

உலகின் 10 சிறிய நாடுகள்

1. வாடிகன் நகரம்

பரப்பளவின் அடிப்படையில் வாடிகன் நகரமே உலகின் மிகச்சிறிய நாடாகும். 0.49 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த தெற்கு ஐரோப்பிய நாடானது 497 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

2. மொனாக்கோ

தெற்கு ஐரோப்பிய நாடான மொனாக்கோவின் பரப்பளவு 2 சதுர கிலோமீட்டர்கள். இங்கு 38,631 மக்கள் வசிக்கின்றனர்.

3. நருவ்

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடான நருவ், 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 11,947 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

4. துவாலு

தெற்கு பசிபிக் பெருங்கடலில் 9 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு குழுவான துவாலு, 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நாட்டின் மக்கள் தொகை 9,646 ஆகும்.

5. சான் மரினோ

இத்தாலியால் சூழப்பட்ட சான் மரினோ 61 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 33,581 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

6. லிச்டென்ஸ்டைன்

160 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட லிச்டென்ஸ்டைன், சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியாவிற்கு இடையில் அமைந்துள்ளது. இங்கு 39,870 மக்கள் வசிக்கின்றனர்.

7. மார்ஷல் தீவுகள்

வடமேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மார்ஷல் தீவுகள் 181 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 37,548 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

8. செயிண்ட் கிட்ஸ் நெவிஸ்

மேற்கிந்திய தீவுகளில் அமைந்துள்ள 261 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட தீவு நாடான செயிண்ட் கிட்ஸ் நெவிஸ் 46,843 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

9. மாலத்தீவுகள்

இந்திய துணைக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள மாலத்தீவுகள், சுமார் 1,200 தீவுகளைக் கொண்ட நாடாகும். பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை. இதன் மக்கள் தொகை 527,799 ஆகும்.

10. மால்டா

ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவிற்கு இடையில், இத்தாலிய தீவான சிசிலியின் தெற்கே அமைந்துள்ள மால்டா, 316 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் 539,607 மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

Find Next One