Tamil

முடி அடர்த்தியா வளர உங்க வீட்டு கிச்சனில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்!

முடி உறுதியாகவும் அடர்த்தியாகவும் வளர வெந்தயம் போதும். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
Tamil

வெந்தயம்

முடி சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு நல்ல மருந்து. இதில் உள்ள அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.
Image credits: our own
Tamil

முடி உதிர்வைக் குறைக்கும்

முடி உதிர்வு, பொடுகு, உச்சந்தலை ஆரோக்கியம் போன்றவற்றுக்கு வெந்தயம் ஒரு இயற்கையான தீர்வு. வெந்தயத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் ஆகியவை நிறைந்துள்ளன.
Image credits: Getty
Tamil

வீட்டிலேயே வெந்தய ஹேர் பேக்ஸ்

உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் அடர்த்தியை கூட்டவும், பொடுகைக் குறைக்கவும் வீட்டிலேயே வெந்தய ஹேர் பேக்குகளை பயன்படுத்தலாம்.
Image credits: Getty
Tamil

முடி செழித்து வளர வெந்தயம்

முடி செழித்து வளர வெந்தயத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று அடுத்து வரும் ஸ்லைடுகளில் பார்க்கலாம்.
Image credits: Getty
Tamil

வெந்தயம் மற்றும் எலுமிச்சை சாறு

முதலில் வெந்தயத்தை நன்றாக ஊறவைக்கவும். பிறகு, அதை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். இதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து அலசிவிடலாம்.
Image credits: Getty
Tamil

வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து சூடாக்கவும். வெந்தயம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும். இந்த எண்ணெயை இளம் சூட்டில் முடியில் தடவி மசாஜ் செய்யலாம்.
Image credits: Getty
Tamil

வெந்தயம் மற்றும் முட்டை மஞ்சள் கரு

ஊறவைத்த வெந்தயத்துடன் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து முடியில் தடவலாம். சிறிது நேரம் கழித்து ஷாம்பு கொண்டு அலசிவிடவும்.
Image credits: Getty
Tamil

வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை

ஊறவைத்த வெந்தயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து முடியில் தடவலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, முடிக்கு கருப்பு நிறம் கொடுக்கவும் ஒரு நல்ல தீர்வாகும்.
Image credits: Getty

வீட்டு டாய்லெட்டை பளிச்சென்று மாத்தனுமா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

தினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

உங்க டிவி ஸ்கிரீனை டேமேஜ் செய்யாமல் சுத்தம் செய்வது எப்படி?

ராத்திரி 'மல்லிகை' செய்யும் மேஜிக்.. இதன் பவர் என்னவென்று தெரியுமா?