துவைத்த துணிகளை வீட்டிற்குள்ளேயே உலர்த்தும் பழக்கம் பலருக்கும் உண்டு. நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் துணிகளை உலர்த்தவில்லை என்றால் துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகிறது.
உபயோகித்த துணிகளை துவைக்க தாமதிக்க வேண்டாம். வியர்வை படிந்த துணிகளை நாட்கள் கழித்து துவைக்கும்போது துர்நாற்றம் போகாது.
துவைத்த பிறகு உடனே துணிகளை உலர்த்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும். ஈரப்பதம் உள்ள துணிகளை அதிக நேரம் அப்படியே வைத்திருக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது.
துவைத்த துணிகளை வெயிலில் உலர்த்துவதுதான் சிறந்தது. மழைக்காலங்களில் காற்றும் வெளிச்சமும் உள்ள இடங்களில் உலர்த்தலாம்.
வினிகர் பயன்படுத்தி துணிகளை துவைப்பது துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. அதேசமயம் எல்லா வகை துணிகளையும் வினிகரில் துவைக்க முடியாது.
அழுக்கு துணிகளை அதிக நாட்கள் துவைக்காமல் வைத்திருப்பதை தவிர்க்கலாம். இது துணிகளில் பூஞ்சை தொற்று மற்றும் துர்நாற்றத்திற்கு காரணமாகிறது.
நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் துவைத்த துணிகளை உலர்த்த வேண்டும். காற்றும் வெளிச்சமும் இருந்தால் மட்டுமே துணிகள் நன்றாக உலரும்.
துணிகள் நன்றாக உலர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில பகுதிகளில் ஈரப்பதம் தங்கி நிற்கும். இது துர்நாற்றத்திற்கு காரணமாகிறது.