technology
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, ஐபோன் 14-ன் விலையை ஆப்பிள் குறைத்துள்ளது. ஐபோன் 14-ன் விலை ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 14 ஸ்மார்ட்போன் இப்போது ரூ.59,900 விலையில் கிடைக்கிறது. அதாவது, அறிமுக விலையை விட ரூ.20,000 குறைந்துள்ளது.
ஐபோன் 14 பிளஸ் இப்போது ரூ.69,900 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த விலை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி ஆகும்.
மேலும்,ஐபோன் 14 சீரிஸ் மொபைல்களை வாங்கும்போது ரூ.3000 வரை வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
ஐபோன் 14 குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமின்றி, உங்கள் வசதிக்கேற்ப நோ காஸ்ட் EMI திட்டத்திலும் வாங்கலாம்.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவை 6 வண்ணங்களில் கிடைக்கின்றன. அவை மிட்நைட், ஸ்டார்லைட், ப்ளூ, பர்பிள், ரெட் மற்றும் யெல்லோ ஆகும்.
ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மொபைல்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகின்றன.
ஐபோன் 14, 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 12 மெகாபிக்சல் + 12 மெகாபிக்சல் இரட்டை பின் கேமரா உள்ளது.
ரூ.50,000-க்கு கீழ் கிடைக்கும் 7 சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன்கள்!
ஐபோன் 16 சீரிஸில் 7 அசத்தலான அம்சங்கள்
உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? தெரிந்துகொள்ள 5 டிப்ஸ்
iPhone-ஐ வேகமாக சார்ஜ் செய்ய 6 குறிப்புகள்!!