Tech Tips

மொபைல் சார்ஜரை சுத்தம் செய்ய எளிய டிப்ஸ்

பேக்கிங் சோடா

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கலக்கவும். இந்த பேஸ்ட்டை சார்ஜரில் அழுக்கான இடத்தில் தடவி பல் துலக்கும் பிரஷ்ஷால் தேய்க்கவும். ஈரத் துணியால் துடைக்கவும்.

பட்துலக்கும் பேஸ்ட்

சார்ஜரில் அழுக்கான இடத்தில் சிறிதளவு பல் துலக்கும் பேஸ்ட்டை தடவி மென்மையான பிரஷ் அல்லது துணியால் தேய்க்கவும். பின் ஈரத் துணியால் சுத்தம் செய்யவும்.

Image credits: Getty

ரப்பிங் ஆல்கஹால்

ஒரு காட்டன் பந்து அல்லது துணியை ரப்பிங் ஆல்கஹாலில் நனைத்து சார்ஜரை மெதுவாக துடைக்கவும். எண்ணெய், தூசி, கறைகளை ஆல்கஹால் எளிதில் நீக்கும்.

ரப்பர்

நீங்கள் சாதாரண ரப்பரை (அழிப்பான்) கூட பயன்படுத்தலாம். சார்ஜரின் அழுக்கான பகுதிகளை அழிப்பானால் மெதுவாகத் தேய்க்கவும். இது தூசி, கறைகளை நீக்கும். 

மைக்ரோஃபைபர் துணி

மென்மையான மைக்ரோஃபைபர் துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து சார்ஜரை சுத்தம் செய்யவும். மைக்ரோஃபைபர் துணி சிறிய தூசி, துகள்கள், அழுக்கை நன்றாக நீக்கும். 

சானிடைசர்

நீங்கள் ஹேண்ட் சானிடைசரையும் பயன்படுத்தலாம். இதில் ஆல்கஹால் உள்ளது. இது அழுக்கு, பாக்டீரியாவை நீக்க உதவும்.

பாத்திரம் துலக்கும் சோப்

சில துளிகள் மைல்ட் டிஷ் சோப்பை தண்ணீரில் கலந்து ஸ்பாஞ்ச் கொண்டு அழுக்கான சார்ஜர் பகுதிகளை சுத்தம் செய்யவும். பின்னர் உலர்ந்த துணியால் துடைக்கவும்.