Tamil

வைஃபை வசதி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக வைஃபை இணைப்பு கொண்டு வரப்பட்ட ரயில் நிலையமாகும். 

 

Tamil

பழமையானது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். 1873ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

Image credits: Getty
Tamil

நடைமேடை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 17 நடைமேடைகள் (platforms) உள்ளன. இது 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

Image credits: Getty
Tamil

சுரங்கப்பாதை

நடைமேடைகளை இணைக்கும் சுரங்கப்பாதை கொண்ட ஒரே ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் தான்.

Image credits: Getty
Tamil

கோபுரங்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு கோபுரங்கள் உள்ளன. அவை சென்னையின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. 

Image credits: Getty
Tamil

காத்திருப்பு அறை

இந்தியாவிலேயே 50 பேர் அமரக்கூடிய குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை உள்ள ஒரே ரயில் நிலையம், சென்னை ரயில் நிலையம்தான். 

Image credits: Getty
Tamil

ஏடிபி தொழில்நுட்பம்

மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு, தானியங்கி/ ரயில் பாதுகாப்பு (ATP) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது ரயில்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. 

Image credits: Getty
Tamil

ஃபுட் கோர்ட்

சென்னை ரயில் நிலையத்தில் இந்தியாவின் பல்வேறு வகையான உணவுகளை வழங்கும் பெரிய ஃபுட் கோர்ட் உள்ளது. 

Image credits: Getty
Tamil

மருத்துவ மையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரத்யேக மருத்துவ மையம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவசர மருத்துவ உதவிக்கு பயணிகள் நாடலாம். 

Image credits: Getty
Tamil

ஐஎஸ்ஓ சான்று

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை செயல்பாடுகளுக்காக ISO 14001:2015 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (EMS) தரச்சான்றிதழைப் பெற்ற முதல் இந்திய ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் ஆகும். 

Image credits: Getty