sports
வாழைப்பழம் இயற்கையான ஆற்றல் ஊக்கி. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் விரைவில் ஜீரணமாகி சக்தியை அளிக்கின்றன. விளையாட்டு வீரர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.
உடலில் சோடியம், பொட்டாசியம் சமநிலையில் இல்லை என்றால் தசைகள் பிடித்துக்கொள்ளும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வீரர்களின் தசைகளுக்கு இது மிகவும் நல்லது.
விளையாட்டு வீரர்கள் அதிகமாக நகர வேண்டியிருக்கும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
எனர்ஜி டிரிங்க்ஸுடன் ஒப்பிடும்போது வாழைப்பழம் இயற்கையான சர்க்கரைகளை அதிகம் வழங்குகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு நிலையாக இருக்கும்.
வாழைப்பழத்தில் டிரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோடோனின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
வாழைப்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ், மால்டோஸ் போன்ற கலவை உள்ளது. இவை உடலுக்கு மெதுவாக சக்தியை அளிக்கின்றன. இதனால் அதிக நேரம் சோர்வடையாமல் இருக்கலாம்.