ஐபிஎல் களத்தில் இறங்கியவுடன் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடத் தொடங்கி விடுகின்றனர். ஐபிஎல்லில் அதிக சிக்சர்கள் அடித்த 5 வீரர்கள் யார் என பார்க்கலாம்.
முதலிடத்தில் டி20யின் மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேனாக இருந்த கிறிஸ் கெய்ல் உள்ளார். இவர் 141 இன்னிங்ஸ்களில் 357 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் ஹிட்மேன் ரோஹித் சர்மா உள்ளார். இவர் இதுவரை ஐபிஎல்-ல் 264 இன்னிங்ஸ்களில் விளையாடி 298 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் ‘கிரிக்கெட்டின் கிங்’ விராட் கோலி இருக்கிறார். கோலி ஐபிஎல்லில் மொத்தம் 291 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் சிஎஸ்கே கேப்டன் தல தோனி உள்ளார். இவர் 242 இன்னிங்ஸ்களில் விளையாடி 264 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.
ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 5வது இடத்தில் ஏபி டிவில்லியர்ஸ் உள்ளார். இவர் 170 இன்னிங்ஸ்களில் 251 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த டாப் 5 வீரர்கள்
IPLல் 600+ ரன்கள் அடித்த டாப் 5 சிறந்த வீரர்கள்!
கோடிகளில் மிதக்கும் கே.எல்.ராகுல்! ஒரு போட்டிக்கு இவ்வளவா?
ஐபிஎல்-ல் அதிகமுறை 50+ அடித்த 5 சூப்பர் வீரர்கள்