Cricket
நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியின் புதிய கேப்டனாக 36 வயதான அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்த உள்ளார்.
கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடர்ந்து 5வது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.
முதல் ஐபிஎல் கோப்பைக்கான வேட்டையில் இருக்கும் ஆர்சிபி அணிக்கு இம்முறை ரஜத் படிதார் கேப்டனாக செயல்படுகிறார்.
ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து இரண்டாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.
ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் தனது முதல் ஐபிஎல் கோப்பையைத் துரத்தும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பந்தை 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. லக்னோ அணி பந்திற்கு கேப்டன் பதவியை வழங்கியுள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் மீண்டும் குஜராத் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்குகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி, அவரை அணி கேப்டனாக நியமித்தது.
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு தலைமை தாங்குகிறார்.