சமையலறையில் உப்பு ஜாடியில் தவறுதலாகத் தண்ணீர் பட்டாலோ அல்லது காற்றில் நீர்த்துப் போனாலோ இனி கவலையே வேண்டாம்.
உப்பு ஈரமாகிவிட்டால், உடனே அதை வெயிலில் காய வைப்போம் அல்லது தூக்கி எறிந்துவிட்டுப் புதிய உப்பை வாங்குவோம். ஆனால், இனி அப்படிச் செய்ய வேண்டாம்.
ஈரமான உப்பை மீண்டும் பழையபடி உலர வைக்க, உங்கள் சமையலறையில் இருக்கும் 'ஒரு கைப்பிடி அரிசி' போதும்!
தண்ணீர் பட்ட உப்பு ஜாடிக்குள் ஒரு கைப்பிடி அளவு காய்ந்த அரிசியைப் போட்டு, நன்றாகக் கலந்து மூடி வையுங்கள்.
அரிசிக்கு இயற்கையாகவே ஈரப்பதத்தை வேகமாக உறிஞ்சும் குணம் உண்டு. உப்பில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை அரிசி சில மணிநேரங்களிலேயே உறிஞ்சிவிடும்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, உப்பு முற்றிலும் காய்ந்து பழையபடி உதிரியாகிவிடும். நீங்கள் அரிசியை சலித்து பிரிக்கலாம் அல்லது அப்படியே விட்டுவிடலாம்.
உப்பு கட்டிப்பிடிப்பதைத் தவிர்க்க, எப்போதும் உப்பு ஜாடியில் 10-15 அரிசி மணிகளைப் போட்டு வையுங்கள்.
குக்கர்ல இருந்து தண்ணி லீக் ஆகுதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
தினமும் மஞ்சள் டீ குடிப்பதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்!
பார்லர் போக தேவையில்லை: அரிசி நீரை இப்படி யூஸ் பண்ணுங்க, முகம் ஜொலிக்கும்!
Sleeping Position : வாஸ்து சாஸ்திரப்படி கணவனுக்கு மனைவி எந்த பக்கம் படுக்கணும்?