வெளியில் இருந்து கரப்பான் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும். கரப்பான் பூச்சி நுழைய வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் அடைக்க கவனமாக இருங்கள்.
Image credits: Getty
Tamil
ஈரப்பதம் இருக்கக்கூடாது
ஈரமான இடங்களில் தான் கரப்பான் பூச்சி தொல்லை எப்போதும் இருக்கும். சமையலறையில் ஈரமான இடங்களை உலர வைக்க கவனமாக இருங்கள்.
Image credits: Getty
Tamil
கிராம்பு மற்றும் பிரியாணி இலை
கரப்பான் பூச்சிகளை விரட்ட கிராம்பு, பிரியாணி இலை நல்லது. சமையலறை அலமாரிகள்,டிராயர்களில் இவற்றை பொடியாகவோ அ முழுதாகவோ போட்டால் போதும். இதன் வாசனை கரப்பான் பூச்சிக்கு பிடிக்காது.
Image credits: Getty
Tamil
வினிகரைப் பயன்படுத்தலாம்
சமையலறையை வினிகர் கொண்டு சுத்தம் செய்யலாம். வெதுவெதுப்பான நீரில் வினிகரைச் சேர்த்து நன்கு துடைத்து சுத்தம் செய்தால் போதும். இதன் வாசனை கரப்பான் பூச்சிக்கு பிடிக்காது.
Image credits: Getty
Tamil
சிங்கை சுத்தம் செய்யலாம்
சமையலறை சிங்கில் கரப்பான் பூச்சி வர வாய்ப்பு அதிகம். எனவே, சிங்கை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க கவனமாக இருங்கள்.
Image credits: Social Media
Tamil
உணவை சேமிப்பது
உணவுப் பொருட்களை காற்று புகாத பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும். திறந்து வைக்கப்பட்ட உணவு கரப்பான் பூச்சிகளை ஈர்க்கிறது.
Image credits: Getty
Tamil
சுத்தம் செய்யலாம்
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க கவனமாக இருங்கள். குப்பைகளும், உணவு மிச்சங்களும் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கின்றன.