ஏசி உங்கள் சருமத்தை பாதிக்குதா? இந்த அறிகுறிகளை கவனிங்க!
வெயில் காலத்தில் ஏசி இல்லாமல் இருப்பது கடினம். ஆனால், அது உங்கள் சருமத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். என்னென்ன அறிகுறிகள் எனப் பார்க்கலாம்.
life-style Apr 25 2026
Author: vinoth kumar Image Credits:Asianet News
Tamil
சருமத்தில் அதிக வறட்சியும், இறுக்கமும் ஏற்படுவது
ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பதால், காற்றில் உள்ள குளிர் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை உறிஞ்சிவிடும். இதனால், சருமம் மிகவும் வறண்டு, இறுக்கமாக இருப்பது போல் உணர்வீர்கள்.
Image credits: Asianet News
Tamil
சருமத்தின் இயற்கையான பொலிவு குறைவது
சருமத்திற்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்காதபோது, முகம் மங்கிப் போய்விடும். இதனால், சருமத்தின் இயற்கையான பொலிவும் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
Image credits: Asianet News
Tamil
அரிப்பு மற்றும் சிவந்த தடிப்புகள் தோன்றுவது
அதிகப்படியான குளிர், சருமத்தை சென்சிடிவ் ஆக்கிவிடும். இதன் காரணமாக, சருமத்தில் அரிப்பு ஏற்படலாம் அல்லது தோல் லேசாக உறிந்து வரலாம். சிலருக்கு சிவந்த தடிப்புகளும் தோன்றக்கூடும்.
Image credits: Asianet News
Tamil
உதடுகள் தொடர்ந்து வறண்டு வெடிப்பது
உடலின் மற்ற பகுதிகளை விட, உதடுகளில் உள்ள ஈரப்பதத்தை ஏசி மிக வேகமாக உறிஞ்சிவிடும். இது உதடுகள் எப்போதும் வறண்டு, வெடித்துப் போவதற்குக் காரணமாக அமைகிறது.
Image credits: Asianet News
Tamil
முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் தெரிவது
ஈரப்பதம் குறையும்போது, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் மெல்லிய கோடுகளும், சுருக்கங்களும் எளிதாகத் தெரிய ஆரம்பிக்கும்.
Image credits: Asianet News
Tamil
சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இருப்பது
சரும வறட்சியை சரிசெய்வதற்காக சருமமே அதிகப்படியான எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கும். ஏசியில் இருக்கும்போதும் முகம் எண்ணெய் பசையுடன் இருப்பது போல் தோன்றினால், அதுவும் அறிகுறிதான்.