சுகோய் (Sukhoi Su-30MKI) முக்கிய போர் விமானம். இரட்டை எஞ்சின் கொண்ட இவ்விமானம், உலகின் வலிமைமிக்க போர் விமானங்களில் ஒன்றாகும். அதிகபட்ச வேகம் 2,120 கிமீ/மணி, வீச்சு 3,000 கிமீ.
Tamil
ராஃபேல்
ராஃபேல் இரட்டை எஞ்சின் கொண்ட நவீன பல்நோக்கு போர் விமானம். இந்தியா பிரான்சிடம் இருந்து 36 விமானங்களை வாங்கியுள்ளது. இது வான்-வான் மற்றும் வான்-தரை ஏவுகணைகளைக் கொண்டுள்ளது.
Tamil
MiG-29
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து MiG-29 விமானங்களை வாங்கியது. இரட்டை எஞ்சின் கொண்ட இவ்விமானம் வான் சண்டையில் சிறந்து விளங்குகிறது. அதிகபட்ச வேகம் 2,445 கிமீ/மணி, வீச்சு 1,430 கிமீ.
Tamil
தேஜஸ்
தேஜஸ் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு போர் விமானம். ஒற்றை எஞ்சின் கொண்ட இது சிறியது மற்றும் லேசானது. ரேடாரில் எளிதில் சிக்காது. அதிகபட்ச வேகம் 1,975 கிமீ/மணி, வீச்சு 3000 கிமீ.
Tamil
மிராஜ் 2000
மிராஜ் 2000 ஒற்றை எஞ்சின் கொண்ட சிறப்பு விமானம். பாலாகோட் வான்வெளித் தாக்குதலில் இவ்விமானம் பாகிஸ்தானுக்குள் சென்று குண்டுவீசியது. அதிகபட்ச வேகம் 2,338 கிமீ/மணி, வீச்சு 3,330 கிமீ.
Tamil
MiG-21 பைசன்
MiG-21 பைசன் ஒற்றை எஞ்சின் கொண்ட பழைய விமானம். அதிகபட்ச வேகம் 2,230 கிமீ/மணி. இவ்விமானத்தின் மூலம் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை வீழ்த்தினார்.
Tamil
ஜாகுவார்
ஜாகுவார் இரட்டை எஞ்சின் மற்றும் இரட்டை இருக்கை கொண்ட விமானம். இதன் முக்கிய பணி தரைப்பகுதியில் குண்டுவீசுவது. அதிகபட்ச வேகம் 1,342 கிமீ/மணி, வீச்சு 2,730 கிமீ.