Tamil

உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும் 7 டிடாக்ஸ் வாட்டர் ரெசிப்பிகள்!

Tamil

எலுமிச்சை டிடாக்ஸ் :

சாதாரண தண்ணீரில் எலுமிச்சை துண்டுகளை சேர்ப்பது எளிதானது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் சுவை, அதிக நீர் குடிக்க தூண்டுவதுடன் உடலின் வளர்சிதை மாற்றத்தையும்  அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

வெள்ளரிக்காய் டிடாக்ஸ் :

வெள்ளரிக்காய் உடலைக் குளிர்ச்சியாக்கும். வெள்ளரி நீர் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைக்கும். மேலும், இது வயிற்று உப்பசம் மற்றும் அஜீரணக் கோளாறுகளைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

புதினா மற்றும் எலுமிச்சை :

புதினா மணமும் எலுமிச்சை புளிப்பும் சேர்ந்த பானம், சர்க்கரை மற்றும் இனிப்புப் பண்டங்கள் சாப்பிடத் தூண்டும் ஆசையைக் (Cravings) கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஆப்பிள் மற்றும் இலவங்கப்பட்டை :

ஆப்பிள் தண்ணீருக்கு இயற்கை இனிப்பைத் தரும். இதனுடன் சேரும் இலவங்கப்பட்டை கலோரிகள் இன்றி உடலுக்கு ஆற்றலைத் தந்து, கொழுப்பைக் கரைக்கவும் பெரிதும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

இஞ்சி டிடாக்ஸ் :

மருத்துவக் குணம் கொண்ட இஞ்சியை நீரில் சேர்க்கும்போது காரத்தன்மை கிடைக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி, வயிற்றில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்ற உதவுகிறது.

Image credits: Getty
Tamil

ஆரஞ்சு மற்றும் புதினா :

ஆரஞ்சு, புதினா கலந்த நீர் சாதாரண தண்ணீரை சுவையானதாக மாற்றும். வெற்று நீர் குடிக்கப் பிடிக்காதவர்கள், இதன் மூலம் சுவையுடன் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்தையும் பெறலாம்.

Image credits: Getty
Tamil

வெள்ளரி, எலுமிச்சை மற்றும் புதினா :

இது உடல் நச்சுக்களை நீக்கி புத்துணர்ச்சி தரும் 'ஆல்-இன்-ஒன்' டிடாக்ஸ் வாட்டர். கலோரிகளற்ற இந்த ஆரோக்கிய பானம், அதிக கலோரி கொண்ட ஜூஸ் வகைகளுக்கு மிகச்சிறந்த மாற்றாகும்.

Image credits: Getty

மூளை ஆரோக்கியத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கும் சிறந்த நட்ஸ் வகைகள்

Magnesium Rich Fruits: இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 7 மெக்னீசியம் நிறைந்த பழங்கள் லிஸ்ட்

Dark Chocolate: சொன்னா நம்பமாட்டீங்க.! டார்க் சாக்லேட் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

Bitter Gourd: சர்க்கரை நோய் முதல் இதய நோய் வரை! பாகற்காய் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்!