ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால் பாலியல் உறவில் நாட்டம் இருக்கும். இது குறைவாக சுரந்தால் சோர்வு, பலவீனம், மன அழுத்தம் கூட வரலாம்.
Image credits: Getty
காரணங்கள்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றையும், அதை சரி செய்யும் உணவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
Image credits: Getty
உணவு முறை
ஆரோக்கியமான உணவுகளால் மட்டுமே டெஸ்டோஸ்டிரோன் சுரப்பை சரியாக வைத்திருக்க முடியும். துரித உணவு, அதிக எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்க்கவும்.
Image credits: Getty
தூக்கமின்மை
ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் தூங்க வேண்டும். டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு வராமல் இருக்க நன்கு தூங்க வேண்டும்.
Image credits: Getty
உடல் பருமன்
கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு உடல் பருமனும் காரணம். இதுவே ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் குறைய வழிவகுக்கும்.
Image credits: Getty
முதுமை
மோசமான உணவு பழக்கம், மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவை முன்கூட்டியே உங்களுக்கு வயதான மாற்றங்களை ஏற்படுத்தும். இதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டிற்கு ஒரு காரணம்.
Image credits: Getty
மாதுளை
பெர்ரி, செர்ரி, மாதுளை ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்யும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து அதன் உற்பத்தியை அதிகரிக்கும்.
Image credits: Getty
முட்டை
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இதில் புரதம், செலினியம் ஆகியவை டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை சரி செய்யும்.
Image credits: Getty
அன்னாசி
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி, பி ஆகும். பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதினாவுடன், அன்னாசி கலந்து குடியுங்கள்.
Image credits: Getty
அவகேடோ
இதில் ஆரோக்கியமான கொழுப்பு, மெக்னீசியம் போன்றவை உள்ளன. இது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.