ட்ரான்ஸ்பரென்ட் புடவையில், நயன்தாரா பேரழகியாய் ஜொலிக்கிறார். இவர் கட்டியிருக்கும் இந்த அடர் நீல புடவை போல், 500 மற்றும் 600 ரூபாயில் கூட நீங்கள் எடுக்கலாம்.
சிவப்பு பட்டுப்புடவை
சிறிய புட்டா போட்ட இந்த சிவப்பு நிற பட்டு புடவை அணைத்து வயதினருக்கும் ஏற்ற புடவையாகும். உங்களை பளீச் என பிரதிபலிக்க செய்யும் இந்த புடவைகள் 1000 முதல் 1500-க்கு வாங்கி விடலாம்.
நியான் பச்சை சாடின் புடவை
கூட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிய விரும்பினால், நியான் கிரீன் சாடின் புடவையைத் தேர்வு செய்யவும். இதுபோன்ற புடவைகளில் 600 முதல் 800 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும் .
கருப்பு ஷிஃபான் புடவை
கருப்பு ஷிஃபான் புடவையில் நயன்தாரா அழகாக இருக்கிறார். அல்லவா? ஒருவேளை உங்களுக்கு இது போல் பொங்கலுக்கு ஜொலிக்க வேண்டும் என்றால் 500 முதல் 800 ரூபாய் செலவு செய்தால் போதும்.
தங்க காஞ்சிபுரம் புடவை
தங்க காஞ்சிபுரம் டிஷ்யூ புடவையில் நயன்தாரா தோற்றம் மிகவும் அழகாக உள்ளது. இது போன்ற சேலைகளை 1200 முதல் 1600-க்குள் எடுக்க முடியும்.
வெளிர் ஊதா புடவை
நயன்தாரா கட்டியிருக்கும் இந்த ஊதா நிற காட்டன் புடவைகள் புதிய ட்ரெண்டாக மாறியுள்ளது. இந்த புடவைகளை 1000 முதல் 1500-க்குள் உங்களால் எடுக்க முடியும்.
மஞ்சள் புடவை
எளிமையின் ராணியாக இருக்கும் நயன்தாரா கட்டியிருக்கும் இந்த மஞ்சள் சேலையை 500 ரூபாய் செலவு செய்தாலே உங்களால் வாங்க முடியும். இந்த பொங்கலை நயன்தாரா