உங்களுக்கு கிரியேட்டிவிட்டி மற்றும் டிசைனிங் திறமை இருக்கிறதா? 12-ஆம் வகுப்புக்கு பிறகு இந்தியாவில் கிராஃபிக் டிசைனர் ஆவது எப்படி என்பதற்கான எளிய வழிகாட்டி இங்கே.
நீங்கள் எந்த ஸ்ட்ரீமில் 12-ஆம் வகுப்பு முடித்திருந்தாலும், ஃபைன் ஆர்ட்ஸ், ஐடி அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.
12-ஆம் வகுப்பு முடித்த பிறகு, கிராஃபிக் டிசைன், ஃபைன் ஆர்ட்ஸ், விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம்.
எந்த துறையில் டிகிரி முடித்திருந்தாலும், கிராஃபிக் டிசைனில் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் படிக்கலாம்.
அடோப் ஃபோட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், கோரல்ட்ரா மற்றும் இன்டிசைன் போன்ற சாஃப்ட்வேர்களை கற்றுக்கொள்ளுங்கள்.
உங்களுடைய கிரியேட்டிவிட்டி மற்றும் டிசைன் திறன்களை வெளிப்படுத்தும் போர்ட்ஃபோலியோவை உருவாக்குங்கள். இது வேலை வாய்ப்புகளை பெற உதவும்.
இன்டர்ன்ஷிப் அல்லது ஃப்ரீலான்ஸ் வேலைகள் மூலம் அனுபவம் பெறுங்கள். இது உங்களுக்கு இண்டஸ்ட்ரியில் தொடர்புகளை உருவாக்க உதவும்.
வேலை செய்யும்போதே ஒரு குறிப்பிட்ட துறையில் ஸ்பெஷலைஸ் செய்யலாம். மேலும், UI டிசைன், UX டிசைன் போன்ற துறைகளில் உயர்கல்வி படிக்கலாம்.