தட்கல் டிக்கெட் ரத்து: இந்திய ரயில்வேயின் விதிமுறைகள் என்ன?
Tamil
ரயில் தட்கல் டிக்கெட்
திடீரென பயணத் திட்டம் உருவாகும்போது, பலர் ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள், ஆனால் சில நேரங்களில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வேண்டியிருக்கும்.
Tamil
ரயில் தட்கல் டிக்கெட் எப்போது முன்பதிவு செய்யப்படும்?
ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும். ஏசி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கான IRCTC விண்டோ காலை 10 மணிக்கு திறக்கப்படும்.
Tamil
வெயிட்டிங் தட்கல் டிக்கெட்டில் பயணிக்க முடியுமா?
ஆன்லைன் தட்கல் வெயிட்டிங் டிக்கெட் செல்லுபடியாகாது. இந்த வெயிட்டிங் டிக்கெட் ரயில்வேயால் ரத்து செய்யப்படுகிறது. ரயில்வே கவுண்டரில் எடுக்கப்பட்ட தட்கல் வெயிட்டிங் டிக்கெட் செல்லும்.
Tamil
தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும்?
தட்கலில் ரயில் டிக்கெட் எடுத்து, கன்பார்ம் டிக்கெட் பெற்று, அந்த டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில்வே ஒரு பைசா கூட திருப்பித் தராது.
Tamil
தட்கல் வெயிட்டிங் டிக்கெட்டுக்கு பணம் திரும்ப கிடைக்குமா?
தட்கலில் ரயில் வெயிட்டிங் டிக்கெட் இருந்தால், டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60 பிடித்தம் செய்து பணம் திருப்பித் தரப்படும்.
Tamil
ஆர்ஏசி டிக்கெட்டை ரத்து செய்தாலும் பணம் திரும்ப கிடைக்குமா?
ஆர்ஏசி டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில்வே ரூ.60 வசூலித்து மீதமுள்ள தொகையைத் திருப்பித் தரும்.
Tamil
சாதாரண டிக்கெட்டை ரத்து செய்தால் எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும்?
உங்களிடம் சாதாரண கன்பார்ம் டிக்கெட் இருந்தால், சார்ட் தயாரிப்பதற்கு முன்பு அதை ரத்து செய்தால், ஸ்லீப்பர்- ரூ.120, தேர்ட் ஏசி- 180, செகண்ட் ஏசி ரூ.200.
Tamil
ரயில் சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்டை ரத்து செய்தால் என்ன நடக்கும்?
ரயில் சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்டை ரத்து செய்தால், ஒரு பைசா கூட திரும்ப கிடைக்காது.