business

உங்கள் யுபிஐ வரம்பை எப்படி அதிகரிப்பது?

Image credits: Social Media

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிப்பு

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. 10 ரூபாய் பரிவர்த்தனைக்கும் கூட யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இப்படி யுபிஐ பணம் செலுத்தினால் தெரியாமலேயே செலவு அதிகரிக்கும்.  

Image credits: FREEPIK

எஸ்பிஐ ஏன் இந்த முடிவை எடுத்தது?

முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது பயனர்களுக்காக யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு வரம்பை நிர்ணயித்துள்ளது. அதை உங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்.

Image credits: FREEPIK

எஸ்பிஐ யுபிஐ வரம்பு எவ்வளவு?

தேவையற்ற செலவுகளை தவிர்க்க எஸ்பிஐ யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்தவாறு யுபிஐ பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை அமைத்து கொள்ளலாம். 

Image credits: FREEPIK

ஒரு நாளைக்கு எத்தனை பரிவர்த்தனைகள் செய்யலாம்?

யூபிஐ மூலம் ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 1,00,000 வரை பரிவர்த்தனை செய்யலாம். சில வங்கிகள் இதை விடக் குறைவான பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதிக்கின்றன.

Image credits: FREEPIK

எஸ்பிஐ யூபிஐ வரம்பை எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ யூபிஐ வரம்பைக் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ யோனோ செயலி அல்லது நெட் பேங்கிங்கைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். 

 

Image credits: FREEPIK

படிப்படியான வழிமுறை

முதலில் யோனோ நெட் பேங்கில் உள்நுழைய வேண்டும். UPI பரிமாற்றத்தைக் கிளிக் செய்து பரிவர்த்தனை வரம்பு அமைப்பை தேர்ந்தெடுத்து, கடவுச்சொல்லை உள்ளீடு சரிபார்த்து புதிய வரம்பை மாற்றலாம்.

 

 

Image credits: FREEPIK

பிறகு என்ன செய்ய வேண்டும்?

உதாரணமாக தற்போது உங்கள் வரம்பு ரூ.50,000 என்றால் எவ்வளவு வேண்டுமோ அதை உள்ளிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். ஓடிபி சரிபார்ப்பை செய்து புதிய யுபிஐ வரம்பு அமலுக்கு வரும்.

Image credits: FREEPIK

யுபிஐ வரம்பு ஏன் முக்கியம்?

யுபிஐ வரம்பை அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகளின் மீது உங்களுக்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். தேவையற்ற செலவு கட்டுக்குள் வரும். 

Image credits: FREEPIK

இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் 7 காரணிகள்!

பர்சனல் லோன் வாங்குவதற்கு முன் இந்த '7' விஷயங்களை கவனியுங்க!

ஏர் இந்தியா முதல் காஃபி கடை வரை: டாடா வசம் இருக்கும் பிரபலமான பிராண்டு

டாடா குழுமத்தின் 6 பிரபல பிராண்டுகள்!