business
அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் தற்போது ரூ.3,100ல் வர்த்தகமாகி வருகிறது. இந்த பங்குகள் திங்களன்று 2.75% அல்லது ரூ.87.55 சரிவை சந்தித்துள்ளன.
அதானி போர்ட்ஸ் பங்குகள் திங்களன்று 3.20% அல்லது கிட்டத்தட்ட 49 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இந்த பங்குகள் தற்போது ரூ.1,484ல் வர்த்தகமாகி வருகிறது.
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் திங்களன்று 4.33% அல்லது கிட்டத்தட்ட ரூ.77 சரிவை சந்தித்துள்ளன. இந்த பங்குகள் தற்போது ரூ.1,703ல் வர்த்தகமாகி வருகிறது.
அதானி டோட்டல் கேஸ் திங்கள், ஆகஸ்ட் 12 ஆம் தேதி 6.97% அல்லது ரூ.60 க்கும் மேல் சரிந்து ரூ.809ல் வர்த்தகமாகி வருகிறது.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் திங்களன்று 4.30% அல்லது ரூ.47.50 சரிவை சந்தித்துள்ளது. இந்த பங்கின் விலை தற்போது ரூ.1,056 ஆகும்.
அதானி பவர் பங்குகளும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி 5.91% அல்லது கிட்டத்தட்ட ரூ.41 வரை சரிந்துள்ளன. தற்போது இந்த பங்குகள் ரூ.654ல் வர்த்தகமாகி வருகிறது.
அதானி வில்மர் பங்குகள் திங்களன்று 4.30% அல்லது ரூ.16.55 சரிந்து ரூ.368 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் திங்களன்று 1.44 சதவீதம் அல்லது ரூ.9 க்கும் மேல் சரிந்துள்ளன. இந்த பங்குகள் தற்போது ரூ.622 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
ஏசிசி பங்குகளின் விலையும் தற்போது ரூ.2,317 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. திங்களன்று இந்த பங்குகள் 1.45 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட ரூ.34 சரிவை சந்தித்துள்ளன.
என்டிடிவி பங்குகளும் திங்களன்று 2.62 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. இந்த பங்குகள் தற்போது ரூ.202 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த பங்குகளின் விலைகள் அனைத்தும் காலை 10 மணி வரையிலானது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.