Tamil

வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் பண்ணலாமா? கூடாதா?

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வண்டியில் பெட்ரோல் டேங்கை நிரப்பலாமா, வேண்டாமா என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வருகிறது. இதுகுறித்து தான் பார்க்க போகிறோம்.

Tamil

கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்

கோடைக்காலம் வந்துட்டால் போதும், வெப்பநிலை தாறுமாறா உயரும். இது மனிதர்களை மட்டுமல்ல நமது வாகனங்களையும் பாதிக்கும்.

Image credits: freepik-AI
Tamil

எரிபொருள் டேங்க் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்

வெப்பம் அதிகமாகும்போது, அது வாகனத்தின் இன்ஜின் மட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் டேங்கையும் நேரடியாக பாதிக்கும்.

Image credits: Google
Tamil

இதோ உங்களுக்கான பதில்.

இந்த மாதிரி நேரத்தில், கார் அல்லது பைக்கில் பெட்ரோல் டேங்கை நிரப்பலாமா, வேண்டாமா கேள்வி எல்லாருக்கும் வரும். அந்த கேள்விக்கான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Image credits: freepik
Tamil

கோடைக்காலத்தில் கார் டேங்கை நிரப்புவது தவறில்லை

பொதுவாக கோடைக்காலத்தில் வாகனத்தின் டேங்கை முழுவதுமாக நிரப்புவது பெரிய தவறு எதுவும் இல்லை. ஆனால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

Image credits: freepik
Tamil

பெட்ரோல், டீசல் வெப்பத்தால் வேகமாக ஆவியாக வாய்ப்பு இருக்கு

பொதுவாக கோடைக்காலத்தில் வாகனத்தின் டேங்கை முழுவதுமாக நிரப்புவது பெரிய தவறு எதுவும் இல்லை. டேங்கில் கொஞ்சம் கூட இடம் இல்லை என்றால், அழுத்தம் அதிகமாகி டேங்க் சேதமடைய வாய்ப்புள்ளது.

Image credits: freepik
Tamil

டேங்க் ஃபுல் செய்தால் என்ன ஆகும்?

டேங்கை முழுவதுமக நிரப்பும்போது, சில சமயம் எரிபொருள் கசிந்து ஆபத்து அதிகமாக வாய்ப்புள்ளது. இது தீ விபத்துக்கும் வழிவகுக்கலாம்.

Image credits: freepik
Tamil

ஆட்டோ-கட் சத்தம் கேட்டதும் நிறுத்துங்கள்

பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பும்போது, நாசிலில் இருந்து 'டக்'னு ஒரு ஆட்டோ-கட் சத்தம் கேட்கும். அது கேட்டதும் பெட்ரோல் போடுவதை நிறுத்த சொல்லுங்கள்.

Image credits: freepik
Tamil

டேங்கில் மேல் மட்டம் வரைக்கும் எரிபொருளை நிரப்ப வேண்டாம்

பாதுகாப்புக்காக, டேங்கில் மொத்த கொள்ளவு 80% முதல் 90% வரைக்கும் மட்டும் எரிபொருள் நிரப்புவது தான் புத்திசாலித்தனம்.

Image credits: freepik
Tamil

காலை/இரவு நேரத்தில் பெட்ரோல் போடலாம்

வெப்பநிலை குறைவாக இருக்கின்ற காலை அல்லது இரவு நேரங்களில் பெட்ரோல் நிரப்புவது நல்லது. இதனால் பெட்ரோல் ஆவியாகுவது குறையும்.

Image credits: freepik

அதிக மைலேஜை வாரி வழங்கும் டாப் 5 CNG கார்கள்..!

ரூ.7 லட்சத்திற்குள் கிடைக்கும் 10 சிறந்த கார்கள்

அட்டகாசமான அம்சங்களுடன் வரும் BYD சீல்! விலை எவ்வளவு?

2025 BYD சீல் அட்டகாசமான அப்டேட்களுடன் அறிமுகம், விலை எவ்வளவு?