Asianet News TamilAsianet News Tamil

விஜய் மகன் சஞ்சய் நடிக்கும் ஷாட் ஃபிலிம் டீசர்...

தளபதி விஜய்-ன் நடிப்பில் சர்கார் திரைப்படம் இந்த் ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு மும்முரமாக தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 2 அன்று சர்கார் இசைவெளியீட்டு விழா வேறு நடக்கவிருக்கிறது. 

தளபதி விஜய்-ன் நடிப்பில் சர்கார் திரைப்படம் இந்த் ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு மும்முரமாக தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 2 அன்று சர்கார் இசைவெளியீட்டு விழா வேறு நடக்கவிருக்கிறது. 

இதனால் சர்கார் குழுவே ஒரு பக்கம் தீயா வேலை செய்து கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பில் இருக்கும் சர்கார் திரைப்படம் இவ்விதமாக வளர்ந்து கொண்டிருக்க, விஜய் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நிகழ்வும் சமீபத்தில் நடந்திருக்கிறது விஜய் ரசிகர்களுக்கு விஜய் மீது எவ்வளவு பாசமோ அதே அளவு பாசம் அவர் மகன் சஞ்சய் மீதும் உண்டு. 

வேட்டைக்காரன் படத்தில் முதல் முறையாக அவரது மகன் திரையில் தோன்றிய போது கூட மகிழ்ச்சியில் திளைத்தனஎ விஜய் ரசிகர்கள். அப்பாவை போலவே சினிமா மீது ஆர்வம் இருக்கும் சஞ்சய் சமீபத்தில் ஒரு குறும்படம் ஒன்றில் பங்காற்றி இருக்கிறார். இந்த குறும்படத்திற்கான டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. 

இந்த டீசரில் சஞ்சய் வரும் ஒவ்வொரு ஃப்ரேமையும் கூட விஜய் ரசிகர்கள் ரசித்து கொண்டாடி வருகின்றனர். ஜங்சன் எனும் பெயரில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படத்தில் சஞ்சய் தன் நண்பர்களுடன் சேர்ந்து பங்காற்றி இருக்கிறார். சஞ்சையை திரையில் பார்க்கும் போது அப்படியே விஜயை பார்ப்பது போலவே இருக்கிறது. 

இதனால் இந்த குறும்படத்திற்கே ஒரு மாஸான லுக் கிடைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது சஞ்சயும், விஜய்-ன் வழியில் விரைவிலேயே கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க போகிறார் என்பது உறுதியாக தெரியவந்திருக்கிறது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Video Top Stories