Asianet News TamilAsianet News Tamil

தூக்க கலக்கத்தில் புத்தகப் பைக்கு பதிலாக, நாற்காலியை தூக்கி சென்ற சிறுவன். வைரல் வீடியோ

முன்னரெல்லாம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் , கையை வைத்து தலையை சுற்றி காதை தொட வேண்டும்.

முன்னரெல்லாம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் , கையை வைத்து தலையை சுற்றி காதை தொட வேண்டும். காது எட்டவில்லை என்றால் பள்ளியில்சேர்த்து கொள்ள மாட்டார்கள் ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை.

பிரி.கே.ஜி என்ற பெயரில் 3 வயது பிஞ்சு குழந்தைகளை கூட பள்ளிக்கு அனுப்பிவிடுகின்றனர். தன்னை விட பெரிய அளவிலான புத்தகப்பைகளை சுமந்து கொண்டு செல்லும் பிஞ்சு குழந்தைகளை பார்த்தாலே பாவமாக இருக்கிறது இன்றைய நாட்களில்.

இந்நிலையில் ஒரு 4 வயது பள்ளி சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிலிப்பைன்ஸை சேர்ந்த பள்ளி சிறுவன் ஒருவன் தன் வகுப்பறையில் தூங்கி கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் முடிந்துவிட்டது என்பதால் அவனை எழும்பி வீட்டிற்கு செல்லுமாறு கூறுகின்றார் அவனின் ஆசிரியர்.

அவனும் தூக்க கலக்கத்தில் பள்ளி பையை எடுத்து செல்வதற்கு பதிலாக நாற்காலியின் கைப்பிடியை தோள்களில் மாட்டிக்கொண்டு நடந்து செல்கிறார். அங்கிருப்பவர்கள் அனைவரும் அவனை பார்த்து சிரிக்கின்றனர். இணையத்தில் வேடிக்கை வீடியோவாக தான் இது வைரல் ஆகி இருக்கிறது. ஆனால் இது வேடிக்கை அல்ல , வேதனை. குழந்தைகளுக்கு சீரான தூக்கம் என்பது தேவை. எந்த அளவிற்கு நிம்மதியாக தூங்குகின்றனரோ, அந்த அளவிற்கு அவர்களின் மூளை சுறு சுறுப்பாக செயல்படும். 

இந்த சிறுவன் புத்தகப்பையை எடுத்து செல்வதை இயந்திரத்தனமாக செய்வதை பார்க்கும் போதும், அனிச்சையாக ஒரு பையை மாட்டுவது போல நாற்காலியின் கைப்பிடிகளை தோளில் போட்டு கொண்டு செல்வதை பார்க்கும் போதும் பாவமாக தான் இருக்கிறது.

Video Top Stories