சிம்டான்காரன் பாடல் வரிகளுக்கு விளக்கம் கொடுத்த பாடகர் 'பம்பா பாக்கியராஜ்' ! Exclusive Interview
தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிரடியாக களமிறங்கவிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிரடியாக களமிறங்கவிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. விஜய் நடிப்பில் மெர்சலுக்கு பிறகு வரவிருக்கும் படம் இது என்பதாலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், சமுதாய அக்கறை கொண்ட கதைக்களம் என பல ப்ளஸ்கள் இந்த திரைப்படத்தில் இருப்பதாலும் சர்கார் ரிலீசுகாக எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
அந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகி இருந்தது சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக். சிம்டாங்காரன் எனும் இந்த பாடல் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக அமையவில்லை என்றாலும் கூட நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை இந்த பாடலுக்கு ப்ளஸ் ஆகவும், விவேக்கின் பாடல் வரிகள் அர்த்தம் புரியாதபடி அமைந்திருப்பது மைனசாகவும் பொது விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டிருந்தபோதும் கூட , இந்த சிங்கிள் ட்ராக் மிகப்பெரிய அளவிலான ரீச்சை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த பாடலை பாடியுள்ள பாடகர் பம்பா பம்பா பாக்யராஜ்.... ஏசியா நெட்டிற்கு கொடுத்த Exclusive இன்டர்வியூ.