சென்னை எழும்பூரிலிருந்து  குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டிவனத்தில் நின்ற போது , ரயில் மீது ஏறிய பாமக தொண்டர் ரஞ்சித், மின்சாரம் தாக்கி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

85 % சதவீத காயங்களுடன், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார்.

ரயில் மறியல் போராட்டத்தின் போது, திடீரென உணர்ச்சி வசப்பட்டு,ரயில் மீது ஏறி கையை  தூக்கி தூக்கி முழக்கமிட்டார்.

அப்போது அவருடைய  கை, ரயிலின் மேற்புறமாக பாயும் உயர் அழுத்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக படுவே, அவரது உடல் தீப்பற்றி எரிந்தது.