Asianet News TamilAsianet News Tamil

நீ தாடி வச்சாலும் சரி... மாறு வேடம் பெற்றுக் கொண்டு அலைந்தாலும் உன் எண்ணம் பலிக்காது!! அன்புமணியை தெறிக்கவிட்ட அமைச்சர்

தர்மபுரியில் எண்ணேகோல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை பரப்புவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூற அன்றில் இருந்து இருவரும் அடுத்தடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் கே.பி.அன்பழகனும் மற்றும்  அன்புமணிக்கும் வார்த்தை யுத்தம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தர்மபுரியில் எண்ணேகோல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை பரப்புவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூற அன்றில் இருந்து இருவரும் அடுத்தடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் கே.பி.அன்பழகனும் மற்றும்  அன்புமணிக்கும் வார்த்தை யுத்தம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேட்டியளித்த அமைச்சர்  கே.பி.அன்பழகன் பிரஸ் மீட் கொடுப்பதற்க்காவே தர்மபுரிக்கு வரும் தலைவரை பற்றித்தானே நீங்க கேட்குறிங்க? அவர ஆறு அருவு படைத்த மனிதனாகவே நான் கருதவில்லை, அவருக்கு ஒரு அறிவு கம்மி. ஏனென்றால் சிப்காட்டிற்கும் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்? ஆண்மையை பற்றி என் பேசுகிறார்? ஆண்மை எதற்கு தேவைப்படும்? அதற்கு வாரிசுக்காக தேவைப்படும் என பத்திரிகையாளர்கள் சொன்னதற்கு, பதிலளித்த அமைச்சர், எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் இருக்கிறார்கள்.  எனக்கு ஆண்மை இருக்கிறது என தெரியாமலேயே பேசியிருக்கிறான் அந்த ஆளு. 

அதாவது எதற்கு எதை ஒற்றுமை படுத்தி பேசுவது என தெரியாமல் பேசுகிறான். தொடர்ந்து ஒருமையில் அவன் இவன் எனப் பேசிய அமைச்சர்,  எப்படி இந்த மாதிரி பேசலாம், அதிலிருந்து அவருடைய கெப்பாசிட்டி தெரிகிறது. அவருடைய தன்மையை நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள். எதற்கு எதை பேசுவதென்றே தெரியாமல் இருக்கும் ஒருவரை இந்த நாடாளு மன்ற தொகுதி மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டனர். அதனால் தான் அவரை ஆறு அறிவு படைத்த மனிதன் அல்ல, ஐந்து அறிவு படைத்த  மனிதன் என சொல்கிறேன்.

அதுமட்டுமல்ல, காமாலை கண்ணனுக்கு ம்பார்ப்பதேல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும் அதுபோல என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு காமாலைப் பிடித்தவர். அவர் என்ன நிலையில் இருக்கிறாரோ அதே நிலையில் மற்றவரை பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒரு  மனிதன் மீது தொடர்ந்து ஒரு பொய்யை சொல்லிக் கொண்டு இருக்கும் பொது அது உண்மையாக மாறிவிடும் என்ற எண்ணம் வைத்துள்ளார். அவருக்கு பதில் சொல்லவில்லை என எனது மாவட்ட மக்கள் என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். மாவட்டத்திலுள்ள மக்கள் உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஒரு சில கருத்துக்களை பதிவிட விரும்புகிறேன்.

நான் தகுதி படைத்தவரா? இல்லையா என சொல்லும் இடத்தில் அவர் இல்லை, அவரை ஒரு ஆளாகவே நாங்கள் ஏத்துக் கொள்ளவில்லை அதனால் அவர் எனக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து எனக்கு தகுதியை கொடுத்துள்ளார் ஜெயலலிதா. யாரை எதிர்த்தால் தேர்தலை சந்திக்கலாம் என கணக்கு போட்டு பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். எதை சொல்வதென்றே தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார் என்றார்.

இன்று அங்கீகாரம் பெற்றுள்ள இந்த கட்சி நிறுவனர், இவரது அப்பா, எனது குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் முச்சந்தியில் நிறுத்தி வைத்து சாட்டையால் அடியுங்கள் எனக் கூறினார். ஆனால் இவரது மகன் தற்போது மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். அந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த பெருமை ஜெயலலிதாவிற்கு போய் சேரும், அப்படி பட்ட அம்மாவை பற்றி பேச கூடிய தகுதி, திராணி இந்த அன்புமணிக்கு இல்லை என கூறினார்.

மேலும் பேசிய அவர், இவர் பூர்வீக கிராமத்தில் இவரது கட்சியை சேர்ந்த ஒருவர் கூட இந்த வார்டு மெம்பராக கூட ஆகவில்லை, ஏன் அந்த பகுதியிலேயே யாரும் தலைவராக கூட வரமுடியவில்லை, அப்படி இருக்கையில் தருமபுரிக்கு தேடி வந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. தர்மபுரி மக்களை ஏமாற்றி வருகின்றனர். நாடளும்றத் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, நாற்காலி கூட போடாத 25 லட்சம் செலவு செய்து போடப்பட்ட மேடையில் நான் நிறுத்தும் வேட்பாளருக்கு ஒட்டு போடச்சொன்னார்.  ஆனால் அனைவரும் டெப்பாசிட் இழந்தது தான் மிச்சம்.  2014 தேர்தலைப் போலவே தற்போது தர்மபுரி மக்களை ஏமாற்றவே தாடியெல்லாம் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற வருகிறாரே தவிர மக்களுக்கு சேவை செய்ய அல்ல என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; நீங்கள் தாடி வைத்துக் கொண்டுய் வந்தாலும் சரி, மாறுவேடம் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி தர்மபுரி மக்கள் உங்களை  ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனப் பேசினார்.  இவரால் வேறு எங்கும் போய் குப்பையை கொட்ட முடியாது. அதாவது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆணக் கதையாக அமைச்சராக இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து, அவரது நிலைமை சிரிக்கிறது என கூறினார். கடைசியாக பேசிய அவர், பிறப்பிற்காக கூடாரம் போட்டு பிரிக்க வந்த அன்புமணிக் கெல்லாம் பயப்படப்வேண்டிய அவசியம் எனக்கில்லை நான் பனங்காட்டு நரி அன்புமணியின்  சலசலப்புக்கெல்லாம்  அஞ்சமாட்டேன் என முடித்துக் கொண்டார்.

Video Top Stories