Asianet News TamilAsianet News Tamil

ஒரு வயது குழந்தையின் அசத்தலான நீச்சல் வீடியோ... இப்படி ஒரு வீடியோவைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேணும்!

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான். அவர்கள் பேசும் மழலை ஆகட்டும், அவர்கள் செய்யும் சின்ன சின்ன குறும்பாகட்டும் எல்லாமே அழகுதான். அழகு மட்டுமல்ல இந்த காலத்து குழந்தைகளுக்கு அறிவும் ரொம்பவே அதிகம் தான்.  அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் பெரியவர்களே கூட திணறி போய்விடுவார்கள். 

பெரியவர்கள் கஷ்டப்பட்டு செய்யும் எந்த ஒரு செயலையும் , குழந்தைகள் மிக சாதாரணமாக செய்துவிடுவார்கள். அந்த வகையில் ஒரு வயது குழந்தையின் செயல் ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அமெரிக்காவில் ஃப்ளோரிடா மாகணத்தை சேந்த கேஸியா எனும் ஒரு வயது குழந்தை தான் அப்படி ஒரு அதிசயத்தி நிகழ்த்தி இருக்கிறது. ஒரு வயதே ஆன கேஸியா நீச்சல் குளத்தில் யாருடைய உதவியும் இன்றி தானகவே நீச்சலிடிக்கும் வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரல் ஆகி இருக்கிறது.
பொதுவாக சில குழந்தைகள் ஒருவயதில் பேசுவதற்கும் நடப்பதற்கும் கூட சிரமப்படுவார்கள். 

ஏனென்றால் அது தான் நடை பழகும் பருவம். ஆனால் கேஸியாவோ நீச்சல் குளத்தில் மிக லாவகமாக , எந்தவித உபகரணமோ, பெரியவர்களின் உதவியோ இல்லாமல், தானாகவே மிகவும் லாவகமாக நீச்சல் பயிற்சி செய்கிறார். நீச்சல் என்பஹ்டு அனைவருமே அறிந்திருக்க வேண்டிய ஒரு தற்காப்பு பயிற்சி. ஆபத்து காலத்தில் தன்னை காத்து கொள்ளவும், பிறரை காப்பாற்றவும் நீச்சல் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதனை ஒரு சின்ன குழந்தை இவ்வளவு லாவகமாக மேற்கொள்வது , நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியதுடன், புதிதாக நீச்சல் பயில்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
 
Video Top Stories