Asianet News TamilAsianet News Tamil

இது காமெடி மூஞ்சி... யோகி பாபு வெளியிட்ட உருக்கமான வீடியோ! சமூக வலைதளங்களில் வைரல்

கடந்த ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் காமெடியில் அதகளம் பண்ணிவரும் யோகிபாபு உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் காமெடியில் அதகளம் பண்ணிவரும் யோகிபாபு உருக்கமான வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில்,  இப்போது சொல்கிறேன். இது அதற்கு தகுதியான மூஞ்சி இல்லை. இது காமெடி மூஞ்சி. இதை வைத்து கடைசி வரை காமெடியனாகவே போய் விடலாம். நீங்கள் அந்தப் படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும். நான் கடைசி வரை காமெடியனாகவேதான் பயணிக்க முடியும். எனக்கு அதுதான் தகுதி. யார் எதைச் சொன்னாலும் தயவு செய்து நம்ப வேண்டாம். முக்கியமாக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இது போன்ற எதையும் நம்பிவிட வேண்டாம். நான் கடைசி வரை காமெடியன்தான். நன்றி! என உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரளாகி வருகிறது.

Video Top Stories