ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் நளாயினி. இவருக்கும் சின்ன ஏர்வாடியை சேர்ந்த ஆனந்த பிரகாசுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான 21 ஆவது நாளில், சவுதி அரேபியாவுக்கு சென்ற ஆனந்த தற்போது, தனது மனைவியை சவுதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆனந்த பிரகாஷ் செய்து வந்துள்ளார். 

சவுதிக்கு வரவழைக்க  விமான டிக்கெட்டை  அனுப்பிய நிலையில் கடந்த 7ம் தேதியில் இருந்து நளாயினி மாயமாகியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரித்தபோது நளாயினி, தனது காதலன் வெண்ணிலவனுடன் இருப்பது தெரியவந்தது. இருவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்ததாகவும் இந்த விஷயம் தெரிந்த பெற்றோர்  அவசரமாக  கல்யாணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

மேலும், கணவன் வெளிநாட்டுக்கு சென்றதும்  மீண்டும் தங்களின்  காதல் தொடர்ந்ததாகவும் கூறிய நளாயினி தனது  காதலனுடனே  வாழ விரும்புவதால் உதவி ஆய்வாளர் சரவணன், நளாயினிக்கு   22 வயதை கடந்துள்ளதால்  தான் காதலிருடனே வாழ  உரிமை உண்டு என கூறியதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், காணவில்லை என புகார் அளித்தால் கண்டுபிடித்து  சொன்னால், கள்ளக்காதலனுடன் அனுப்பி வைப்பதற்க்கா என  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த உதவி ஆய்வாளர் சரவணன், கள்ளக்காதல் தவறில்லை என உச்சநீதிமன்றமே  சொல்லிவிட்டது  என்னால் என்ன செய்ய முடியும் என்றார். கல்யாணமான  21 வது நாளில் நம்பி விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற கணவன், தனது  மனைவியை  அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் அனுப்பிவைத்த தகவல் அறிந்து மிகுந்து மனவுளைச்சலில் உள்ளதாக தெரிகிறது.