Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை! ஒரு நாள் செம்ம மழை...

வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கையில்; தென் மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழகம் மற்றும் இலங்கை அருகே நிலவி வரும் மேலடுக்கு சுழற்ச்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 தினங்களை பொருத்த வரையில் மீதமான மழையும் ஓரிரு முறை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
 

தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி காற்றத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அந்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும். பிறகு புயலாக மாறி ஓமன் வழியே நகரகூடும் என்பதால் 

மீனவர்கள் வரும் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் தென்கிழக்கு அரபி கடல், லட்சதீவி, குமரி கடல் பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பிட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தை பொருத்த வரையில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் குள்ளம்பாடி 11 செமீ மழையும், திருசெந்துர் 10செ மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Video Top Stories