தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு நாளொன்றுக்கு 10,000 ரூபாய் மட்டுமே ரொக்கமாக செலவழிக்கலாம் என தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏற்கனவே 20 ஆயிரம் ரூபாயாக இருந்ததை தற்போது 10 ஆயிரமாக குறைத்துள்ளது.
தேர்தல் என்றாலே பணப்புழக்கம் அதிகமாகும், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலின்போது கோடிக் கணக்கான ரூபாய் செலவி செய்து வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்குத் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கட்சிகள் செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தேர்தலில் அதிகளவு பண புழக்கத்தை தடுக்கும் நோக்கில், வேட்பாளர்கள், தங்கள் பிரசாரத்துக்காக செலவிட அனுமதிக்கப்படும் தொகையை, 20 ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக தேர்தல் கமிஷன் குறைத்து உள்ளது. இந்த உத்தரவு, இம்மாதம், 12 முதல் அமலுக்கு வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதேபோல், தனிநபர் அல்லது நிறுவனத்திடம் இருந்தும் ரூ.10,000க்கு அதிகமாக நன்கொடையோ அல்லது கடனோ வேட்பாளர்கள் பெறக் கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 26, 2018, 8:53 AM IST