Asianet News TamilAsianet News Tamil

திமுகவினரின் அடுத்த சர்ச்சை வீடியோ... பிரியாணி கடை... பியூட்டி பார்லர் தொடர்ந்து பஜ்ஜி கடை!!

திமுகவினர் அடாவடி செய்பவர்கள் என்ற கருத்து மக்களிடையே நிலவி வரும் நிலையில் அக்கட்சியினர் அடிக்கடி வம்பிழுத்து சர்ச்சைகளில் சிக்கி வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதுவும் கேமராவால் திமுகவின் மானமே போகிறது என திமுக தலைமை டென்ஷனில் உள்ளதாம்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு தி.மு.க. நிர்வாகியான பாக்சர் யுவராஜ் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் இலவசமாக பிரியாணி வேண்டும் என கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து   திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் செல்போன் கடையில் தண்டாரம்பட்டு மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ரகுபதி, அவரது நண்பர் கணேஷ் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். ரகுபதியும், கணேஷூம் செல்போன் கடைக்கு மீண்டும் சென்று கடை  ஓனர் மணிவண்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கடையில் உள்ள ஊழியர் தங்களை பாதுகாத்துக்கொள்ள சேரை எடுத்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த முயன்றார். ஆனால் அந்த சேரை பறித்த ரகுபதி அதனை வைத்து மணிகண்டனை பலமாக தாக்கினர். மேலும், கடையையும் அடித்து உடைத்துள்ளனர்.   இந்த சம்பவத்தை அடுத்து பெரம்பலூரில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண்ணின் மீது திமுக மாவட்ட முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் சரமாரி தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த சம்பவங்கள் அடங்குவதற்குள் திமுக தொண்டர்கள் கூட்டமாக பஜ்ஜிகடைக்கு சென்று,கடையை மூட சொல்லி கடைக்காரரை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிரியாணி கடை, செல்போன் கடை, பியூட்டி பார்லர் இப்போ பஜ்ஜிக்கடை என அடுத்தடுத்து சிக்குவதால் திமுக தலைமை செம்ம கடுப்பில் உள்ளதாம்.  ஆனால், விசாரித்ததில் கருணாநிதி மறைந்த தினத்தன்று கொங்கு மண்டலத்திலுள்ள ஒரு ஊரில் மாலை 6 மணிக்கு மேல் பஜ்ஜி கடை ஒன்று திறந்ததால் கோபப்பட்ட திமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பஜ்ஜி கடைக்காரரை தாக்கியுள்ளனர்.  திமுக ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதால் வேறு கட்சியை சேர்ந்த சிலர் தற்போது இந்த சர்ச்சை வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

(பஜ்ஜிக்கடையிலே சிசிடிவி கேமரா இல்லைன்னா என்ன? பக்கத்துலே நிக்குறவன் மொபைல் கேமராவிலே ரெக்கார்டு பண்ண மாட்டானா?! இது கூடத் தெரியாம  பண்ணலாமா என நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர்)