Asianet News TamilAsianet News Tamil

புழல் ஜெயில் பிரியாணி சமைக்கும் விடியோ!

சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடர் சோதனைகள் நடைபெற்ற நிலையில், மீண்டும் சிறை வளாகத்தில் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை மேற்கொள்வது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து சோதனை நடத்தப்பட்ட போது கட்டில்கள், டிவிகள், சமையல் பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

"

இந்த நிலையில், புழல் சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது ஓராண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், செப்டம்பர் மாதச் சோதனைக்குப் பின்னர் எடுக்கப்பட்டது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

Video Top Stories