Asianet News TamilAsianet News Tamil

மும்தாஜுக்கு வீடு தேடி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபலம்! வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மும்தாஜ் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்திருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் ஸ்ரைட் ஃபார்வேர்ட் ஆன போட்டியாளர் என்றால் அது மும்தாஜ் தான். மற்றவர்களின் முதுக்கும் பின்னால் பேசுவதை விட, அவர்களின் முகத்துக்கு நேராகவே மறுப்பு சொல்வது, கோபப்படுவது என வெளிப்படையான நபர் மும்தாஜ். அதே போல தான் அன்பு காட்டுவதிலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனாலும் இவரது பாசம் நடிப்பு என்ற வகையிலேயே சக போட்டியாளர்களால் பார்க்கப்பட்டது. அதிலும் அவர் ரித்விக்காவிற்கு டாஸ்கில் உதவ மறுத்ததால் ,அவர் மீது பிக் பாஸ் ரசிகர்களும் கோபத்தில் தான் இருந்தனர். 

உதவி என்பது ஒருவர் மனதார செய்ய வேண்டும். பிக் பாஸில் இருந்த எல்லா போட்டியாளர்களுக்குமே தெரியும், இவ்வாறு தியாகம் செய்தால் மக்கள் மனதில் தியாகி, நல்லவர் என்ற பெயர் கிடைக்கும் என்பது. அது மும்தாஜுக்கும் தெரியும். ஆனாலும் அவர் போலியாக ஒருவருக்கு தியாகம் செய்வதை விட, வெளிப்படையாக முடியாது என மறுத்திருக்கிறார்.

இதற்கு அவரை வில்லியாக சித்தரித்தனர் சக போட்டியாளர்கள். மொத்தத்தில் எல்லா நெகடிவும் சேர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் மும்தாஜ். அவரின் எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாலாஜி, விஜயலஷ்மி போன்ற பலருக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்திருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. 

இதற்காக தானே விஜயலஷ்மி வேண்டுமென்றே மும்தாஜை டார்கெட் செய்தார். இது ஒரு பக்கம் இருக்க மும்தாஜின் எலிமினேஷன் அவரின் நலம் விரும்பிகளுக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளித்திருக்கிறது.  அவர் மீது அதிக அக்கறை கொண்ட கலா மாஸ்டர் இதனால் மும்தாஜை நேரில் சென்று சந்தித்து , பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததற்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார். 

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மும்தாஜ் தன்னுடைய நேர்மையான, அன்பான , குணத்தினால்அதிக அளவிலான ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார். மும்தாஜ் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததே நல்லது என்பது போல தான் கலாமாஸ்டர் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Video Top Stories