அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்பு ! கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் பதவியேற்பு விழா!
அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் இன்று பதவி ஏற்கிறார். அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கடும் குளிர் நிலவுவதால் கேபிடல் கட்டடத்தின் உள் அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை தோற்கடித்து 2வது முறையாக வெற்றி பெற்றார்.