Asianet News TamilAsianet News Tamil

மலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ

பிரதமர் நரேந்திர மோடியை மலைப்பாம்புகள், முதலைகளை  வைத்து மிரட்டும்  வகையில் பாகிஸ்தான் பாடகி ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பிய உள்ளது 

பாகிஸ்தானைச் சேர்ந்த ரபி பிர்ஸாடா என்ற பாடகி, கடந்த மாதம் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் மலைப்பாம்புகள், முதலைகளை வைத்துக் கொண்டு இந்தப் பரிசுகள் அனைத்தும் பிரதமர் மோடிக்கே என்றும், தன் தோழர்கள் அவருக்கு விருந்தளிக்கக் காத்திருப்பதாகவும் கூறி அதை கேப்ஷனோடு ட்வீட் ஒன்றையும்  பதிவிட்டிருந்தார்.

அதன்படி, இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பிரதமருக்கு கொலை மிரட்டல், பாம்பு-முதலைகளை வீட்டில் வளர்த்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக பாகிஸ்தான் பாடகிக்கு அந்நாட்டு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த பாடகிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதகாக கூறப்படுகிறது 

இதனை குறித்து விளக்கமளித்துள்ள அந்த பாடகி, தான் பல செய்தி விவாதங்களில் அதே பாம்பு, முதலைகளுடன் தோன்றும் போதெல்லாம் எதுவும் கூறாமல் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட்டதும் தன்மீது பாகிஸ்தான் வனத்துறை நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் 

மேலும், அவற்றை வாடகைக்கு எடுத்ததாகவும், துரோகிகளான பாகிஸ்தான் வனத்துறையை விட இந்தியர்கள் எவ்வளவோ மேல் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் அந்த வீடியோவில் பிரதமர் மோடியை மட்டுமே குறிப்பிட்டு பேசியதாகவும் இந்தியர்களை விமர்சிக்கவில்லை என்றும் பாடகி ரபி பிர்ஸாடா தெரிவித்த உள்ளார் 

Video Top Stories