Asianet News TamilAsianet News Tamil

இலங்கையில் நடந்தது போல் வங்கதேசத்திலும், ஷேக் ஹசீனா வீட்டை சூறையாடிய இளைஞர்கள் !!

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டை இளைஞர்கள் முற்றுகையிட்டு சூறையாடினர்.
 

First Published Aug 5, 2024, 6:25 PM IST | Last Updated Aug 5, 2024, 6:24 PM IST

வங்கதேசத்தில் அரசு வேலைக்கான் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டம் வலுத்ததையடுத்து அவர் ராஜினாமா செய்த கையோடு. நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதேபோல் கடந்த 2022ம் ஆட்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ராஜபக்‌ஷே குடும்பத்தினர் பதவிவிலகக்கோரி போராட்டம் நடத்தி அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டு சூறாயாடியது குறிப்பிடத்தக்கது