விமானத்தில் ஏறி இறங்கும் வரை கணவர் செய்த பாச போராட்டம்! கடைசி நிமிடத்திலாவது மனைவிக்கு தெரிந்ததோ?
அமெரிக்காவைச் சேர்ந்த Courtney Lee Johnson என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு Twitter-யில் புகைப்படம் ஒன்று பதிவிட்டார் அந்த புகைபடத்தியில் விமானத்துக்குள் ஒருவர் நின்று கொண்டிருக்க அருகில் உள்ள இருக்கையில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்
விமானத்துக்குள் மனைவி நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக ஒருவர் 6 மணி நேரமாக நின்று கொண்டே வருகிறார் இதனை கர்ட்னி லீ ஜான்சன் தனுது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு "இதுதான் உண்மையான அன்பு "என்று அதில் குறிப்பிட்டிருந்தார் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அந்த புகைப்படம் ட்விட்டர்யில் வைரலானது சுமார் 16 ஆயிரம் லைக்குகளையும் 3500 ரி ட்வீட்களையும் பெற்றுது
அதேபோல் சமுக வலைதங்களையில் மனைவி மீது அவர் வைத்திருந்த அன்பை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் "இதுதான் காதலின் உச்சம் அவரிடமிருந்து அன்பையும் அறிவையும் நாம் கற்க வேண்டும் என புகழ்ந்து தள்ளி உள்ளனர்
அதேசமயம் ஒருபக்கம் கணவரின் அன்பை சிலரை சில பாராட்டினாலும் மறுபக்கம் அவர் மனைவியும் சுயநலம் கொண்டவர் என்று சிலர் வறுத்து எடுத்து உள்ளனர் அதனைத் தொடர்ந்து ட்விட்டர் வாசிகள் மத்தியில் இது அன்பா ? சுயநலமா ? என்று விவாதம் அனல் பறக்க தொடங்கியுள்ளது ஒரு சிலர் இது அன்பு மற்றும் காதலின் வெளிப்பாடே தவிர வேறு ஒன்றும் இல்லை எனக் கூறி வருகின்றனர் மற்றொரு தரப்பினர் இது காதல் அல்ல இதுவே பெண்ணின் சுயநலம் அவர் தலையை அவர் தோளில் வைத்து தூங்க முடியவில்லையா ?காதல் இப்படி வேலை செய்யாது என்று வாதிட்டு வருகின்றனர்