காருக்குள் தூங்கிய டிரைவர்.. தானாக 90 கிலோ மீட்டரில் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார்.. அதிர்ச்சி வீடியோ..!
அமெரிக்காவில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டுநர் ஒருவர், வாடிக்கையாளரை ஏற்றி கொண்டு தூங்கி கொண்டே, வாகனத்தை ஓட்டி உள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெரிக்காவியில் உள்ள மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 90 கிலோ மீட்டர் வேகத்தில், ஓட்டுநர் ஒருவர் தூக்கியபடி வாகனத்தை செலுத்திய ஓட்டுனரை, Dakota Randall என்பவர் தன்னுடைய போனில் படம்பிடித்து அவதானி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது கார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது காரின் ஓட்டுனர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டதும் நான் தனது காரில் இருந்து அவரை எச்சரிக்கை விட அழைத்தும் அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்ப முடியவில்லை என்றும் கிடைத்த ஒரு நிமிட வாய்ப்பில் இந்த வீடியோ பதிவுசெய்த செய்ததாகவும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.