Viral Video : இந்தியர்கள் அமெரிக்காவில் இருக்க கூடாதாம்! இந்திய பெண்களை தாக்கிய அமெரிக்க பெண்!

அமெரிக்க பெண் ஒருவர், இந்திய பெண்களை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. 

First Published Aug 26, 2022, 10:53 AM IST | Last Updated Aug 26, 2022, 10:53 AM IST

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் டெல்லாஸ் பார்க்கிங்கில் மெக்சிகன் - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த எஸ்மெரால்டா உப்டான் என்ற பெண் இந்தியப் பெண்கள் நான்கு பேரை சரமாரியாக திட்டினார். ''இந்தியாவுக்கு திரும்பச் செல்லுங்கள். நான் இந்தியர்களை வெறுக்கிறேன். நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் அமெரிக்கா வருகின்றனர்'' என்று உரத்த குரலில் மிரட்டும் தொனியில் பேசினார். இந்தியப் பெண்கள் அமைதியாக இருந்தனர். அருகில் வந்து கை நீட்டி பேசிய அந்தப் பெண் எதிர்பார்க்காத நிலையில் திடீரென நான்கு இந்தியப் பெண்களையும் தாக்கினார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாக டெக்சாஸ் போலீசார் எஸ்மெரால்டாவை கைது செய்துள்ளனர்.