ட்ரம்ப்பை தில்லாக முறைத்த 16 வயது சிறுமி..! பரபரப்பான ஐநா வீடியோ..
அமெரிக்கா அதிபர் டிரம்ப் வருகை தந்தார் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த ட்ரம்பை இறுக்கமான முகத்துடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். சுவீடன் நாட்டை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் 16 வயதே ஆனா இந்த இளம் பெண் பருவநிலை மோசமடைந்து வருகிறது, எனவே பள்ளிக்கு செல்லவில்லை என்ற போராட்டத்தின் மூலம் உலக புகழ் பெற்றவர் தான் கிரேட்டா. உலகம் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது எனவே பருவநிலையை மாற்றத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பல்வேரு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று ஐ.நாவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய கிரேட்டா உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார் முன்னதாக மாநாட்டுக்காக அமெரிக்கா அதிபர் டிரம்ப் வருகை தந்தார் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த ட்ரம்பை இறுக்கமான முகத்துடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.